மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை'
ADDED : 11 minutes ago
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் நாயகியாக நடித்த மதுபாலா அந்தப் படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை' பாடல் மூலம் புகழ்பெற்றார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்ன சின்ன ஆசை' என்ற பெயரில் தயாராகும் படத்தில் அவர் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்குகிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். மதுபாலா உடன் இந்திரன்ஸ் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்கிறார்.
முழுக்க முழுக்க வாரணாசியில் படமாக்கப்பட்ட இந்த படம் 2026 ஜனவரியில் திரையரங்குகளில் வெளியாகிறது.