‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை
ADDED : 3 hours ago
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‛சிறகடிக்க ஆசை'. இந்த தொடர் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி, 39. சென்னை, பிராட்வேயில் கணவருடன் வசித்து வந்தார். இவர் திடீரென அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவருக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் ராஜேஸ்வரி. மன உளைச்சலில் இருந்த இவர் மாத்திரையை அதிகளவு உண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிவி நடிகை தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.