அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில்
காமெடியனாக இருந்த சந்தானம் கதைநாயகன் ஆகி, பல படங்களில் நடித்தார். ஆனால், கடந்த சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தில்லுக்கு துட்டு லேட்டஸ்ட் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல், இங்க நான் தான் கிங் படங்கள் கூட ஓடவில்லை. இதனால், பாலகிருஷ்ணன் இயக்க, சிம்பு நடிக்கும் படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க ஓகே சொன்னார். ஆனால், சிம்புவின் கால்ஷீட் குளறுபடி, வேறு சில பிரச்னைகள் காரணமாக அந்த படம் எடுக்கப்படவில்லை.
இப்போது ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்திவில்லை. சென்னையில் நடந்த விழாவுக்கு வந்த சந்தானத்திடம் ஜெயிலர் 2 படம் குறித்து நிருபர்கள் கேட்க, முதலில் உம்... என்றவர், நான் எதை செய்தாலும் வெளிப்படையாக சொல்வேன். அது என்ன கள்ளக்காதலா என மறைமுகமாக பதில் அளித்தார். மேலும் அடுத்த படத்துக்காக புது கெட்அப்பில் இருப்பதாகவும், எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்யப் போவதாகவும் கூறினார்.