மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா
நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருடம் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. அதே சமயம் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு அல்லது படப்பிடிப்பு துவக்கம் என அப்டேட் எதுவும் இல்லாமல் பல மாதங்கள் கடந்து விட்டன. இன்னொரு பக்கம் அஜித் தனது கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் 'ஏசியன் லீ மேன்' சீரிஸ் கார் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
அஜித்தின் இந்த கார் பந்தயங்களை டாக்குமென்டரி ஆக படமாக்கும் பணிகளில் இயக்குனர்கள் சிறுத்தை சிவாவும், ஏ.எல்.விஜயும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ லீலா மலேசியாவில் கார் பந்தயம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று அஜித்தை சந்தித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தில் ஸ்ரீ லீலா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அஜித்தை இவர் சந்தித்தது அதை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.