உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல்

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல்


சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் கூறுகையில், ''ராஜேஷ்வரி தனிப்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இப்படி செய்துள்ளார். அவர் மன அழுத்ததில் இருந்து இருக்கிறார். அந்த சூழ்நிலையில் தவறாக முடிவெடுத்துள்ளார். இப்படி பிரச்னையில் இருக்கும் சங்க பெண் உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 5 பெண் உறுப்பினர்கள் கொண்ட பெண்கள் அணி அமைக்கப்பட உள்ளது. அந்த குழு சங்க உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படும். விரைவில் அந்த குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !