உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆனந்​தினி பாலா இயக்கத்தில் ரேச்சல் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். பாபு ராஜ், வினீத் தட்டில், ரோஷன் பசீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறைச்சி வெட்டும் பெண்ணாக ரேச்சல் நடித்துள்ளனர். ஆக் ஷன் நிறைந்த பழிவாங்கல் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாக வேண்டியது. சில பிரச்னையால் வெளியாகவில்லை.

இந்நிலையில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சரியான நேரம் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளோம்'' என தெரிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை. இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !