உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்'

வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்'

ஹிந்தியில் ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர்'. இப்படத்தில் அவருடன் அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ‛தெய்வத்திருமகள்' புகழ் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஸ்பை கலந்த ஆக் ஷன் படமாக வெளியானது. இப்படம் திரைக்கு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டி உள்ளது. 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி இப்படம் வசூலித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !