ஜவுளிக்கடை ஊழியர்களுக்காக கும்கி பாடலை பாடி மகிழ்வித்த டி.இமான்
ADDED : 66 days ago
விக்ரம் பிரபு முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான கும்கி திரைப்படம் கடந்த 2012ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு டி.இமானின் இசையில் உருவான பாடல்கள் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தன. படம் வெளியாகி 13 ஆண்டுகளை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கோவை சென்றிருந்த இசையமைப்பாளர் இமான் அங்கே உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சென்று இருந்தார்.
அங்கிருந்த பெண் ஊழியர்கள் பலரும் இமானிடம் கும்கி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தங்களுக்காக பாடச் சொல்லி ஆர்வமுடன் கேட்டனர். இமானும் அவர்கள் கோரிக்கையை ஏற்று ஒன்னும் புரியல சொல்ல தெரியல என்கிற பாடலை சில நொடிகள் பாடினார். ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதை ஆர்வமுடன் கேட்டு ரசித்த வீடியோ கிளிப் போன்ற தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.