மீண்டும் பாடகர் ஆக சிவகார்த்திகேயன்
ADDED : 27 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற அவதாரங்களில் அசத்தியுள்ளார். பாடகராக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வாயாடி பெத்த புள்ள, என்னா மயிலு, வண்ணார பேட்டையிலே உள்ளிட்ட பாடல்களையும் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் தான் நடித்துள்ள 'பராசக்தி' படத்தில் 'தரக்கு தரக்கு' என்கிற புரட்சிகரமான பாடலை பாடியுள்ளார் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுதான் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக பாடியுள்ள பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.