மாதவன், கங்கனா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு
ADDED : 145 days ago
'தலைவி' படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் அடுத்து மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து 'சர்க்கிள்' எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இவர்களுடன் இணைந்து கவுதம் ராம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று ரிலீஸ் தேதிக்காக பல மாதங்களாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகுவதற்கான சூழல் நிலவியுள்ளது என கூறப்படுகிறது.