டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல்
ADDED : 127 days ago
வினோத் இயக்கத்தில் விஜய் கடைசி படம் என அறிவித்து, நடித்துள்ள படம் ‛ஜனநாயகன்'. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் படம் திரைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது பாடலை நாளை மறுநாள் டிச., 18ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் டிரண்ட் செய்துள்ளனர். படத்தின் இசை வெளியீடு டிச., 27ல் மலேசியாவில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.