உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்த் மகனை வாழ்த்த மனம் இல்லையா? கவுரவம், ஈகோ தடுக்கிறதா?

விஜயகாந்த் மகனை வாழ்த்த மனம் இல்லையா? கவுரவம், ஈகோ தடுக்கிறதா?


மறைந்த நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'கொம்பு சீவி' படம் நாளை ரிலீஸ் ஆகிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' இயக்குனர் பொன்ராம் இயக்கி உள்ளார். இந்த இயக்குனர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இதுவரை படம் குறித்து பேசவில்லை. ஹீரோ சண்முக பாண்டியனுக்கு இதுவரை வாழ்த்து சொல்லவில்லை. அதேபோல் விஜயகாந்தால் வளர்ந்த பல நடிகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த பட நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை.

நடிகர் விஜய் கூட இந்த படம் குறித்து சண்முக பாண்டியனுக்கு வாழ்த்து சொல்லி ஒரு டுவீட் கூட போடவில்லை. வீடியோ மெசேஜ் கூட அனுப்பவில்லை. இதற்குமுன்பு 'சகாப்தம், மதுரவீரன், படைதலைவன்' படங்களில் சண்முகபாண்டியன் நடித்து இருந்தாலும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் சண்முகபாண்டியன். ஆனால் அவரை வாழ்த்த, கை கொடுக்க மனமில்லாமல் திரையுலகினர் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 'தி கோட்' படத்தில் விஜயகாந்த் ஏஐ உருவத்தை பயன்படுத்திய விஜய், இதுவரை சினிமா விஷயத்தில் சண்முகபாண்டியனை அழைத்து கூட பேசவில்லை. ஆதரவாக வாய்ஸ் கொடுத்ததில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

BHARATH, TRICHY
2025-12-23 10:58:05

அந்த துரோகிகள் வாழ்த்தினா என்ன வாழ்த்தவில்லைனா என்ன?


Premanathan S, Cuddalore
2025-12-20 17:20:03

இவர்கள் வாழ்த்துக்களை எதிர்பார்ப்பது பிச்சைக்கார புத்தி படம் நல்லாயிருந்தால் மக்கள் வாழ்த்துவார்கள் அதுதான் கௌரவம்