உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன்

கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன்


ஆரம்ப காலத்தில் தன் தம்பி, சுள்ளானை வைத்து, 'ஹிட்' படங்களை கொடுத்த செல்வமான இயக்குனர், பின்னர் அவரை வைத்து இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் மீண்டும், சுள்ளானை வைத்து படம் இயக்கி, சரிந்த, தன் 'மார்க்கெட்'டை துாக்கி நிறுத்தி விட வேண்டும் என்று அவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'கால்ஷீட்' கேட்டு வருகிறார்.

ஆனால் சுள்ளானோ, 'செலவுக்கு வேண்டுமானால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், 'கால்ஷீட்' மட்டும் கேட்காதே. மீண்டும், 'பிளாப்' படத்தை கொடுத்து, என் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்ள நான் தயாராக இல்லை...' என்று அடித்து சொல்லி விட்டார். இப்படி சொந்த தம்பியே தன்னை கழட்டி விட்டதால், 'சோஷியல் மீடியா'வில் புலம்பல் செய்திகளை வெளியிட்டு, சுள்ளானை மறைமுகமாக விமர்சித்து வருகிறார், செல்வமான இயக்குனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !