உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாயகன் ஆன பாடலாசிரியர் பிரியன்

நாயகன் ஆன பாடலாசிரியர் பிரியன்


ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படங்களை இயக்கிய இசாக், அடுத்து 'வெகுளி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியர் பிரியன் நாயகனாக அறிமுகமாகிறார். திவ்யா நாயர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் 'பாய்ஸ்' மணிகண்டன், டேனி, சாப்ளின் பாலு, பூவையார், இமான் அண்ணாச்சி, சர்மி ரவி, சேரன் ராஜ், ரென், ஈரோடு சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜே.ஷமீல் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் இசாக் கூறும்போது, “நாட்டில் நடக்கும் ஒரு கொடூர செயலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை சொல்லாத கருத்தை வலியுறுத்தி புதிய கோணத்தில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன? என்று யூகிக்க முடியாத வகையில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுபுறங்களில் படம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது” என்றார். ஏற்கெனவே சினேகன், பா.விஜய் போன்றவர்கள் நடிகராகி இருக்கும் நிலையில் தற்போது பிரியனும் நடிகராகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !