உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சரஸ்வதி சபதத்தின் இன்னொரு வெர்ஷன்

பிளாஷ்பேக் : சரஸ்வதி சபதத்தின் இன்னொரு வெர்ஷன்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த 'சரஸ்வதி சபதம்' படத்தில் பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இடையே யார் பெரியவர் என்ற சர்ச்சை எழுந்து அதை நிரூபிப்பதற்காக பூமிக்கு வருவார்கள். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பின்பு வந்த படம் 'முப்பெரும் தேவியர்.

இந்த படத்தின் கதை வேறு மாதிரியானது. சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோர் சந்தித்து, தங்களில் யார் மனிதர்களிடையே அதிக மதிப்பு பெற்றவர் என்பது குறித்து விவாதிக்கின்றனர். இந்த விவாதத்தில் அவர்களின் மனைவியரும் ஈடுபடுகின்றனர், மேலும் ஒவ்வொருவரும் தங்கள் கணவரே மக்களிடையே மிகவும் மதிக்கப்படுபவர் என்று கருதுகின்றனர்.

தங்களின் உதவி இல்லாமல் தங்கள் கணவர்களால் செயல்பட முடியாது என்பதை மூவரும் ஒப்புக்கொள்கின்றனர். அந்த மூன்று கடவுள்களும் தங்கள் மனைவியரை, தங்கள் சக்திகளின் துணையின்றி பூமியில் சிறிது காலம் செலவிடுமாறு சவால் விடுகின்றனர்.

சரஸ்வதி, ஒரு ஆணவக்காரனுக்கு எதிராகப் போட்டியிட வேண்டிய ஒரு கவிஞருக்கு உதவச் செல்கிறாள். லட்சுமி, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஒரு பக்தியுள்ள குடும்பத்தின் வீட்டிற்குச் செல்கிறாள். பார்வதி, ஒரு ராஜ்யத்தின் அனாதையாக்கப்பட்ட உண்மையான இளவரசனை வளர்த்து, அனைத்து தடைகளையும் மீறி அவனை மீண்டும் அரியணையில் அமர்த்த செல்கிறார். இறுதியில் அனைத்து கடவுள்களும் ஒருவருக்கொருவர் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதுதான் படத்தின் கதை.

இந்த படத்தில் கே.ஆர்.விஜயா பார்வதியாகவும், லட்சுமி லட்சுமியாகவும், சுஜாதா சரஸ்வதியாகவும் நடித்தனர். பிரபு, அம்பிகா இளம் ஜோடியாக நடித்தார்கள். கே.சங்கர் இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !