மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் ‛ஹாட்ஸ்பாட் 2' இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்
ஹாட்ஸ்பாட் 2 படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் நடித்த அடியே என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்நிலையில் 2வது முறையாக அவருடன் கை கோர்க்கிறார்.
ஹாட்ஸ்பாட் 2 படத்தில் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு, அசார் நடித்த ஏண்டா தலையில எண்ணெய் வைக்கலை போன்ற படங்களை விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கிறார். இதில் ஏண்டா தலையில எண்ணெய் வைக்கலை படத்தை தயாரித்தவர் ரெஹைனா. இவர் ஜி.வி.பிரகாசின் அம்மா. இப்படியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்துக்கும் இடையே நட்பு தொடர்கிறது. தனது படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்பதும் இவரின் கனவாம்.
இதற்கிடையில் ஹாட்ஸ்பாட் 2 தொடரில் பெண்களை தவறாக காண்பிக்கிறார்கள். ஆடை சுதந்திரம் விஷயத்தில் உள்ள கருத்துகள் ஏற்கதக்கதல்ல என்று சில பெண்ணியவாதிகள் விமர்சிக்க, 'படத்தின் சில சீன்களை மட்டும் பார்த்துவிட்டு அப்படி பேசியிருக்கிறார்கள். முழு படத்தை பார்த்துவிட்டு பேசட்டும். அப்போதும் குறை சொன்னால் அது அவர்கள் உரிமை, கருத்து. என் இஷ்டப்படி படம் எடுப்பது என் கருத்து, என் உரிமை' என்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.