உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மவுனப் படம் 'காந்தி டாக்ஸ்'

8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மவுனப் படம் 'காந்தி டாக்ஸ்'


இன்றைய உலகில் மக்களின் முதன்மையான பொழுதுபோக்காக சினிமா இருக்கிறது. ஆரம்ப காலத்தில் 100 வருடங்களுக்கு முன்பு மவுனப் படமாக ஆரம்பமான சினிமா, பின்னர்தான் வசனத்துடன் கூடிய பேசும் படமாக மாறியது. இப்போது பல மாற்றங்கள், வளர்ச்சிகளைக் கடந்து, ஒலி, ஒளி வடிவில் பல புதுமைகளுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல வளர்ச்சிகளை அடையலாம்.

மவுனப் பட காலத்திற்குப் பிறகு பேசும் படங்களாக மட்டுமே தொடர்ந்த சினிமாவை அபூர்வமாய் சிலர் மீண்டும் மவுனப் படங்களாய் கொடுத்தார்கள். இன்றைய தலைமுறைக்கு 1987ல் கமல்ஹாசன், அமலா நடித்து வெளிவந்த மவுனப் படமான 'பேசும் படம்' பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கலாம். அதற்கடுத்து 30 வருடங்களுக்குப் பிறகு 2018ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த 'மெர்க்குரி' என்ற மவுனப் படம் வெளிவந்தது.

அதன்பின் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடிக்க 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தை ஆரம்பித்தார்கள். சில தாமதத்திற்குப் பிறகு இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடித்த 'பேசும் படம்' வெளிவந்த போது அதிகம் பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதே சமயம் எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த 'மெர்க்குரி' படத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.

அடுத்து நாளை வெளியாக உள்ள 'காந்தி டாக்ஸ்' மவுனப் படம் ரசிகர்களிடம் பேசப்படுமா என்பதற்கு ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !