உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி

தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி

2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, நயன்தாரா, சாய் பல்லவி, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, ஏஆர் ரஹ்மான், தமன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்கள் பலர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான்
‛பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக தமிழக அரசின் விருதை பெறுவதில் பெருமை கொள்கிறேன். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. விருது பெறும் அனைவருக்கும் பாராட்டுகள்.

தனுஷ்

வட சென்னை படத்திற்காக மாநில விருதை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி. இது எனக்கு ஒரு உண்மையான பெருமையாகும். விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

மாரி செல்வராஜ்
2018ம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு விருதுகளை பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கும், 2021ம் ஆண்டிற்கான சிறந்த வசனம், சிறந்த கலை, சிறந்த மூன்றாவது படம் என மூன்று விருதுகளை கர்ணன் திரைப்படத்திற்கும் வழங்கி கவுரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

பார்த்திபன்
பார்த்திபன் வெளியிட்ட நீண்ட பதிவின் சுருக்கம் இது.... ‛‛விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில் முப்பத்தய்ந்நு வருஷமாக ஓடும் இந்தக் குதிரையும் கலந்துக் கொள்வதே இன்பமெனில் கப்பை தூக்குவது பேரின்பம் அல்லவா? அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பத்து விருதுகள். மகிழ்ச்சிக்கு வார்த்தையோ எல்லையோ உண்டா? முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சாமிநாதன் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு நன்றி.

கருணாகரன்

தமிழக அரசின் 2019ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை மான்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி. என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். மான்ஸ்டர் படக்குழுவிற்கும் நன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !