தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா'
ADDED : 2 days ago
கடந்த 2011ம் ஆண்டில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து ஹாரர், காமெடி கலந்த படமாக வெளியானது 'காஞ்சனா'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் காஞ்சனா 4 பாகங்கள் வரை உருவாக காரணமாக அமைந்தது. காஞ்சனா படத்தில் ராய் லட்சுமி, சரத்குமார், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தமிழில் எப்படி காஞ்சனா வெற்றி படமாக அமைந்ததோ, அதேபோல் தெலுங்கிலும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா, தெலுங்கானாவில் வருகின்ற மார்ச் 13ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்கு காரணமாக திரையுலகில் காஞ்சனா 4 இந்தாண்டில் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர் என கூறப்படுகிறது.