உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல்

சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல்


நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த சில வருடங்களாக இவர் ஹிந்தி படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக தான் சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளனர் என்கிறார்கள்.

கடந்த 2024ம் ஆண்டில் ஹிந்தி இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரதத்தை தழுவி 'கர்ணா' என்கிற படத்தை இயக்க உள்ளதாகவும், இதில் கதாநாயகனாக சூர்யா மற்றும் கதாநாயகியாக ஜான்வி கபூர் என இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

இப்போது ராகேஷ் ஓம் பிரகாஷ் அளித்த பேட்டியில் முதல்முறையாக கர்ணா படம் குறித்து அவர் கூறியதாவது, கர்ணா படத்திற்காக ஆறு வருடங்கள் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளேன். இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். திரைக்கதை எழுதும் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த தருவாயில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை தள்ளிவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது, ஆனால் கைவிடவில்லை. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஆறு பாடல்களை இசையமைத்து வைத்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !