உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

'அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், லிட்டில் ஜான், ராஜ பார்வை, மைக்கேல் மதன காமராஜன்' போன்ற படங்களை இயக்கிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது புதிய படத்தை இயக்கவுள்ளார். இவருக்கு இப்போது 94 வயது நடைபெற்று வருகிறது.

இவரின் 61வது படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தயாரிப்பு கண்காணிப்பாளர் ஆக 'கல்கி 2898 ஏ.டி, மகாநதி' ஆகிய படங்களை இயக்கிய நாக் அஸ்வின் பணிபுரிகிறார். இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் தலைப்பை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !