உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்!

'7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்!


கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்தப்படம் தெலுங்கிலும் ‛7ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது .இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது 'வித் லவ்' புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜனிடம் '7ஜி ரெயின்போ காலனி 2' குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது, 7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு நிறைவு பெறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் உருவாகிறது. 7ஜி ரெயின்போ காலனி வெளியாகும் போது எனக்கு 2 வயது. வளர்ந்த பிறகு அந்த படத்தை பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. நான் எங்கே போனாலும் என்னிடம் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்கின்றனர். நானும் இந்த படத்திற்காக காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !