உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா

மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா


நடிகர் அதர்வா நடிப்பில் சமீப காலமாக அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட மல்டி ஹீரோக்களில் ஒருவராக மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. அப்படி கடந்த மாதம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் போராளி மாணவர் கதாபாத்திரத்தில் அதர்வா நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் 'அட்ரஸ்' என்கிற படத்திலும் காளி என்கிற போராளி கதாபாத்திரத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் அதர்வா.

இயக்குனர் ராஜமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இசக்கி பரத், பூஜா ஜவேரி ஆகியோர் நடித்துள்ளனர். கேரளா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஒன்று பல வருடங்களாக இரண்டு மாநிலங்களிலும் இணைய முடியாமல் அட்ரஸ் இல்லாமல் தவித்த கதையையும் அந்த மக்கள் பட்ட கஷ்டங்களையும் சொல்லும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறதாம். தங்களது கிராமத்தை ஒரு மாநிலத்துடன் இணைக்க போராடும் போராளியாக தான் அதர்வா நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !