உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நந்தன்' இரண்டாம் பாகம் தயாராகிறது : இயக்குனர் தகவல்

'நந்தன்' இரண்டாம் பாகம் தயாராகிறது : இயக்குனர் தகவல்

சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம் 'நந்தன்'. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை பேசியது. விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வசூல் சுமாராகத்தான் இருந்தது.

இந்நிலையில் 'நந்தன்' படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் இரா.சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ள அவர், 'முழுக்க முழுக்க 'நந்தன்' படத்தை பற்றி பேசினோம். 'நந்தன் 2' படத்தை உருவாக்க மூவரும் தயாராக இருக்கிறோம். விரைவில் நல்ல செய்தி வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இரா சரவணன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் இரா சரவணன் என் உயிர் நண்பன் எனது கஷ்ட காலங்களில் துணை நின்றவர் அவருக்காக உயிரையே கொடுப்பேன். படம் கொடுக்க மாட்டேனா என்று பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !