தமிழில் உடனே வாய்ப்பு பெற்ற ஸ்ரீலீலா
தெலுங்குத் திரையுலகத்தில் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. பொங்கலுக்கு வெளிவந்த 'பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ரத்னமாலா என்ற கதாபாத்திரத்தில் துடிப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
தமிழில் அவரது முதல் படம் வெளிவந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அடுத்த தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படத்தில் நடிக்கிறார் ஸ்ரீலீலா. இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்கிறார். இருந்தாலும் இருவருக்குமே படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தற்போது இளம் நடிகையர்கள் குறைவாகவே உள்ளார்கள். ஸ்ரீலீலா நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தேர்ச்சி பெற்றவர். தனுஷ் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரலாம்.