உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் ஜீவா சங்கர்

9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் ஜீவா சங்கர்

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா சங்கர் தமிழ் சினிமாவில் நான், அமரக்காவியம், எமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். எமன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆன நிலையில் தற்போது ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராது இண்வொடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜீவா சங்கர் ஒரு படத்தை இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக அதர்வா நடிக்கிறார். வாணி போஜன், ரூபா மஞ்ஜரி என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வருகின்ற நாளை, பிப்ரவரி 6ம் தேதியன்று மதியம் 1 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !