வெங்கடேஷ் படத்தில் பஹத் பாசில்
ADDED : 111 days ago
தெலுங்கில் சரிலேரு நீகேவ்வரு, F2, F3 , பகவந்த் கேசரி, சங்கராந்திக்கி வஸ்துனாம், மன சங்கர வர பிரசாத் காரு உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை தந்தவர் அனில் ரவிபுடி. சங்கராந்திக்கி வஸ்துனாம் படத்திற்கு பின் மீண்டும் அனில் ரவிபுடி, வெங்கடேஷ் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது. இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அதில் நடிக்க கார்த்தி, பஹத் பாசில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வழக்கமான அனில் ரவிபுடியின் படமாக அதிரடியான, காமெடிகள் நிறைந்த கமர்ஷியல் கதையில் உருவாகிறதாம்.