கார் ரேஸில் அஜித்தை உற்சாகப்படுத்தும் நட்சத்திரங்கள்: பின்னணியில் இப்படி ஒரு விஷயமா?
துபாயில் நடக்கும் கார்ரேசில் அஜித் தீவிரமாக இருக்கிறார். நேற்று துபாய் சென்று சிவகார்த்திகேயன் அஜித்தை சந்தித்து பேசிய நிலையில், இன்று வெங்கட்பிரபு சந்தித்து பேசியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இப்படி அஜித்தை கார் ரேஸ் நடக்கும் இடத்துக்கே சென்று முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் பேசி வருகிறார்கள். அஜித்தை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்த பயணத்தை அஜித் தரப்பே திட்டமிடுகிறார்கள்.
கார் ரேஸ் ஸ்பாட்டில் அஜித் போல இந்த நட்சத்திரங்களும் டிசர்ட், உடை அணிகிறார்கள். அஜித்தின் கார் ரேஸ் டாக்குமென்ட்ரி ஆக அல்லது வேறு வகையில் படமாக்கப்படுகிறது. அதற்காகவே யுவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, சிபிராஜ் உட்பட பலர் அங்கே சென்றுள்ளனர். இயக்குனர்கள் விஜய், சிவா பெரும்பாலும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்வை படமாக்குகிறார்கள் என தெரிகிறது. கார் ரேஸ் பணிகள் முடிந்தவுடன் அந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.