'ராமாயணா' படத்தில் யஷ்ஷிற்கு தம்பியாக விஜய் சேதுபதி!
ஹிந்தியில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இதில் ராமன் ஆக ரன்பீர் கபூர், சீதா ஆக சாய் பல்லவி , ராவணன் ஆக யஷ் மற்றும் சன்னி டியோல், காஜல் அகர்வால், ரகுல் பீரித் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹென்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் என இருவரும் இசையமைக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாகம் இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராமாயணா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி ராமாயணா படத்தில் விபீஷணன் கதைப்படி ராவணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் நியாயம், தர்மம் படி வாழ்பவர் என்பதால் ராமாயணத்தில் இவர் ராமனுக்கு ஆதரவாக நின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.