உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!


தெலுங்கில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்திற்கு பிறகு தற்போது 'ஓ சுகுமாரி' என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். திருவீர் நாயகனாக நடிக்கிறார். குடும்பப் பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு ஸ்பாட்டிலேயே யூனிட்டை சேர்ந்தவர்கள் தோசை சுட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் தோசை சுட்டு உள்ளார். இணைய பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-02-14 11:11:38

ஆஹா ஆஹா என்னவொரு தகவல் நாட்டுக்கு நல்ல நல்ல செய்தியாக தரும் தினமலரை பாராட்ட வார்த்தைகளே இல்ல இதே போல நாளைக்கு யாராச்சும் நடிகை நடிகர்கள் பிரியாணி செய்யறது இட்லி சுடறது இதெல்லாம் முழு வீடியோவா போட்ட எங்களுக்கெல்லாம் நல்ல உதவிகரமாக இருக்கும்