உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன்
ADDED : 210 days ago
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'உஸ்தாத் பகத்சிங்'. கதாநாயகிகளாக ஸ்ரீலீலா ,ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் பார்த்திபன் 'நல்லா நாகப்பா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரின் முதல் பார்வை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு பார்த்திபன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகின்ற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது.