அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத்
ADDED : 4 days ago
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழிலும் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 என ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லோக்சபாவில் எம்.பி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'துரந்தர்' படம் இந்திய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் அக்ஷய் கண்ணா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. கங்கனா ரனாவத் பல வருடங்களுக்கு முன்பு அக்ஷய் கண்ணா குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அக்ஷய் கண்ணாவிடம் முதலில் பேச முயன்றேன். பிறகு அவரை கவர்ந்திழுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவு ஏன் என்னை அவர் பார்ப்பது கூட இல்லை'' என கூறியுள்ளார்.