உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ்

'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமியின் தேனாண்டாள் பிலிம்சுக்கு 'நான் ருத்ரன்' என்ற படத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலருக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில் தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காமல் பிற படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததால் இந்த படம் பாதியிலேயே முடங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை படத்திற்கு செய்த செலவான 20 கோடியை கேட்டு தனுசுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் “2025ம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !