உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை

செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார். தனது ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்பரேஷன் சார்பில் மெல்லிசை, புரியாத புதிர், தரமணி, பயர், அண்டாவ காணோம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தனது படத் தயாரிப்பு செலவிற்காக சினிமா பைனான்சியரான ககன் போத்ராவிடம் 47 லட்சம் கடன் பெற்ற இவர் அதை திருப்பி செலுத்தும் வகையில் கொடுத்த 47 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது.

இதையடுத்து, சதீஷ்குமார் மீது ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு செக் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு வழக்கில், ககன் போத்ரா, குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற நீதிமன்றம், சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதம் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !