வாசகர்கள் கருத்துகள் (1)
திருடப்பட்ட பாட்டு இதில் இவருக்கு இங்கு சான்ஸ் கொடுக்கவில்லையாம் என்ன உருட்டு
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'வீரா ராஜ வீரா'என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் தனது தந்தை நசீர் பயாசதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதிக் பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷன் மீது டில்லி பாடகர் உஸ்தாத் டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். ஏ.ஆர்.ரஹ்மான், பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் மனுதாரருக்கு 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஏ.ஆர். ரஹ்மான் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாடகர் உஸ்தாத் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஏ.ஆர்.ரஹ்மான் ரூ 2 கோடியை டில்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கட்ட உத்தரவிட்டு, வழக்கை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இதன் மூலம் இந்த வழகில் ஏ.ஆர்.ரஹ்மானுகு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருடப்பட்ட பாட்டு இதில் இவருக்கு இங்கு சான்ஸ் கொடுக்கவில்லையாம் என்ன உருட்டு