சாய்பல்லவி சம்பளம் எகிறியது
ADDED : 29 minutes ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல். திடீரென சாய்பல்லவி உயர பல காரணங்கள் உள்ளன. தமிழில் அமரன் படத்துக்குபின் அவர் இமேஜ் உயர்ந்துள்ளது. மற்றொன்று தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அதுமட்டுமல்ல இப்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இதிகாச தொடரான ராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிக்கிறார். ஆகவே இவ்வளவு சம்பளம் என்கிறார்கள். தனுஷ் படத்தில் ஸ்ரீலீலாவும் இன்னொரு ஹீரோயின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆக இருக்கிறார். அவர் சம்பளம் 12 கோடி முதல் 15 கோடி வரை பெறுகிறாராம்.