'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கருப்பு'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்தது. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
அபூர்வமாய் ஏதாவது ஒரு அப்டேட் மட்டும் வரும். கடைசியாக படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கொடுத்த ஒரு அப்டேட் வந்தது. தமிழ்ப் புத்தாண்டுக்காவது படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, தேர்தலுக்குப் பின் கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று தெரிவித்தார்.
“ஒரு சமயத்தில் 'வலிமை' அப்டேட், 'வலிமை' அப்டேட் என்று கேட்கப்பட்டது. இப்போது 'கருப்பு' ரிலீஸ் அப்டேட் என்றுதான் பலரும் கேட்கிறார்கள். பட ரிலீஸுக்கு முன்னாடி புரமோஷன் பண்ணும் போது பயங்கரமா பில்டப் கொடுத்து, படம் வந்ததுக்குப் பின்னாடி, நான் சொல்றதுக்கும், அவங்க எதிர்பார்க்கிறதும் வேற விதமா இருந்தா இப்பலாம் செம அடி அடிக்கிறாங்க.
நான் எப்போதும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். கருப்பு படம் ரொம்ப நல்லாருக்கும், உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும், முதல் முறை இப்பதான் இதைப் பத்தி சொல்றோம்,” என்று மேலும் கூறினார்.