"மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்!
ADDED : 10 hours ago
கடந்த 2022ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'மகான்'. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் தான் பெற்றது.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் கூறியதாவது, மகான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஜடியா கிடைத்துள்ளது. அதை எழுத எனக்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. 2027 அல்லது 2028ம் ஆண்டில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம். என தெரிவித்துள்ளார்.