உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா?


நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான ஒரு புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றுள்ளது என்கிறார்கள்.

தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான பாக்யஸ்ரீ போஸ் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார் என்கிறார்கள். இது உறுதியானால் முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !