உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்'

இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்'

தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.எல்.விஜய் என்கிற விஜய். அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தேவி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் இதற்குப் பிறகு அவர் கொடுத்த படங்கள் எதுவும் அவரது கேரியருக்கு பலமாக அமையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'மிஷன் : சாப்டர் ஒன்' என்ற படத்தை இயக்கினார்.

தற்போது 'காதல் ரீசெட் ரிபீட்' என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியோ சங்கர் என்ற புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

வருகிற மார்ச் 6ம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இயக்குனர் விஜய்க்கு இந்த காதல் ரீ என்டரி கொடுக்குமா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !