உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்!


'பராசக்தி' படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 'சேயோன்' என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'தாய் கிழவி' என்ற படத்தை இயக்கி உள்ள சிவகுமார் முருகேசன் இயக்கப் போகிறார்.

இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி இந்த சேயோன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. மேலும் தனது இந்த பிறந்த நாளை குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-02-18 22:24:25

அனைத்திலும் விளம்பரம் தேட இவரால் மட்டுமே முடியும்