உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது

டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'டாக்சிக்'. விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த் மற்றும் டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் ஸ்டைலில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் வியாபார பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அதில் இடம்பெற்ற ஆபாச காட்சிகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 20ம் தேதியன்று காலை 9.35 மணியளவில் படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். கன்னடத்தில் தயாரானாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படம் வரும் மார்ச் 19ல் உலகம் முழுக்க வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !