ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...?
இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்விக்கு பிறகு வேள்பாரி என்ற நாவலை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஷங்கர். தனது கனவு படமான இதை இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டு வருகிறார். இதன் மூலம் இரண்டு முறை தவறவிட்ட வெற்றியை மீட்டு எடுத்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறார்.
இப்படத்தில் நடிப்பதற்கு விக்ரம், சூர்யாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய ஷங்கர், அதன்பிறகு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகள் பின்னர் வதந்தியானது. தற்போது வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க தனுஷிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த தனுஷின் 55வது பட பூஜையில் ஷங்கர் பங்கேற்றார். இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வேள்பாரி படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.