'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ்
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'கேரளா ஸ்டோரி' படம் பரபரப்பை கிளப்பியது. கேரளாவில் உள்ள இளம்பெண்கள் வேலை வாய்ப்புக்காக அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக அந்த படத்தில் சொல்லப்பட்டது. அந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் வரி விலக்கு கொடுத்தது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் இந்து பெண்கள் கட்டாய காதலுக்கு உட்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாக கதை அமைந்துள்ளது. படத்தின் டிரைலரில் இது வெளியானது. இதை தொடர்ந்து இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரி கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தணிக்கை வாரியத்திற்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.