புருஷன் படப்பிடிப்பு துவங்கியது
மத கஜ ராஜா, ஆம்பள, ஆக் ஷன் ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக நடிகர் விஷாலும், இயக்குனர் சுந்தர் சியும் இணைகின்றனர். இந்த படத்திற்கு ‛புருஷன்' என பெயரிட்டு கடந்த மாதம் ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர். நாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
இது ஒரு குடும்ப படமாக, அதேசமயம் கொஞ்சம் ஆக் ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது. குஷ்பு தயாரிக்கிறார். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன. சென்னையில் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகவலை நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‛‛எனக்கு பிடித்தமான இயக்குனர் சுந்தர் சி உடன் புருஷன் படப்பிடிப்பு துவங்கியது. என்டர்டெயின்ட்மென்ட் துவங்கியது'' என குறிப்பிட்டுள்ளார் விஷால்