உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன்

'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன்

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு படங்களை இயக்கிய மீரா கதிரவன், தற்போது 'ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார்.

படம் பற்றி மீரா கதிவரன் கூறும்போது, “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதை சாத்தியப்படுத்த 20 வருடமாகி இருக்கிறது. இது வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த, நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.

நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய 'வல்லோனே' பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம்.ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்து படத்தில் இணைத்துள்ளோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !