பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம்
ADDED : 14 hours ago
தமிழ் சினிமாவை 80களில் ஆட்சி செய்தவர்களில் ஒருவர் பஞ்சு அருணாசலம். அவர் இயக்குனர் கனவோடுதான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் பாடலாசிரியர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா என அனைத்து துறைகளிலும் வெற்றியாளராக வலம் வந்தார். என்றாலும் அவரால் ஒரு இயக்குனராக தன்னை முன்னிறுத்த முடியவில்லை.
1988ம் ஆண்டு தான் எழுதிய 'மணமகளே மருமகளே வா வா' என்ற புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி 'மணமகளே வா' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். பின்னர் இளையராஜா தயாரிப்பில் 'புது பாட்டு' என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு தம்பி பொண்டாட்டி, கலிகாலம் படத்தை இயக்கினார். ஆனால் எந்த படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் படம் இயக்கும் முயற்சியையும் கைவிட்டார்.