உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா

என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா


ஹிந்தியில் 'சேக்ரட் கேம்ஸ்' வெப் தொடரில் நடித்த நடிகர் ஜதின் சர்னா, அடுத்ததாக 'நா ஜானே கவுன் ஆ கயா' எனும் படத்தில் நடித்துள்ளார். மார்ச் 6ல் ரிலீசாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜதின் சர்னா பங்கேற்று வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இந்த படம் என்னை வேறொரு கோணத்தில் காட்டுவதால் பதட்டத்தை விட உற்சாகமாக இருக்கிறேன். ரசிகர்கள் இப்படத்தில் என்னை ஒரு காதல் கதையில் பார்ப்பார்கள்.

இப்படத்தில் எனது கதாபாத்திரம் உணர்ச்சிவசமானது, நேர்மையானது மற்றும் அவரது உணர்வுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. காதல் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சில நேரங்களில் டயலாக் பேசுவதை விட, பார்ப்பது கூட அதிக உணர்வுகளை வெளிப்படுத்தும். உடல் மொழி மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நிறைய கஷ்டப்பட்டேன். காதல் நாடகத்தனமாக இல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

இப்படம் காதலை நம்புவது பற்றியும் விதியை நம்புவது பற்றியும் சொல்கிறது. சில நேரங்களில் காதல் எதிர்பாராத நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் வருகிறது. அதுவே தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !