உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் விற்பனை

டாக்சிக் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் விற்பனை

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள படம் 'டாக்சிக்' . கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் வியாபாரங்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வியாபாரம் ஆகி உள்ளது.

சென்னை சிட்டி தின்க் ஸ்டுடியோஸ், செங்கல்பட்டு ஒயிட் நைட் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ், நார்த், சௌத் ஆற்காடு, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி எஸ் பிக்சர்ஸ் மற்றும் மதுரை, திருச்சி, ராம்நாடு, தஞ்சாவூர், சேலம் 5 ஸ்டார் செந்தில் என ஏரியா வாரியாக வாங்கியுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

மேலும், ஜனநாயகன் படத்திற்கு அட்வான்ஸ் தந்து காத்திருக்கும் விநியோகஸ்தர்களுக்கு ஜனநாயகனுக்கு ஈடாக ரூ. 63 கோடி மதிப்பில் வியாபாரம் செய்துள்ளனர் என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !