திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 250 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தாலும் கூட தற்போது அவர் 'பாலன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிப்பவர்கள் யார் என்கிற விவரம் தற்போது வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்க உள்ளார் என்று ஒரு தகவல் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது. இதுவும் மஞ்சுமமேல் பாய்ஸ் போல ஒரு சர்வைவல் திரில்லர் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலை கேள்விப்பட்ட உடனேயே இந்த செய்தியில் எந்த உண்மையுமில்லை இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் கேட்டிருக்கலாமே.. அது மட்டுமல்ல நான் ஒன்றும் சர்வைவல் திரில்லர் படங்களில் ஸ்பெஷலிஸ்ட் அல்ல” என்று கூறி திலீப் படத்தை நான் இயக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சிதம்பரம்.